இந்தியாவில் தினசரி கொரோனா 26,115 ஆக குறைந்தது; 252 பேர் சாவு
1 min read
The daily corona in India is as low as 26,115; 252 deaths
21.9.2021
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 26,115 ஆக குறைந்தது. 252 பேர் இறந்தனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா 2வது அலையில் அதிக பாதிப்புகள் காணப்பட்டன. இந்த நிலையில், சமீப நாட்களாக கொரோனா பாதிப்புகள் ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.
இந்நிலையில், இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்டு உள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் 26,115 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.
இந்த எண்ணிக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை 30,570 ஆகவும், நேற்று 34,403 ஆகவும் பதிவாகி இருந்தது. இதனால் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,34,78,419ல் இருந்து 3,35,04,534 ஆக உயர்வடைந்து உள்ளது.
ஒரே நாளில் 34,469 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3,27,49,574 ஆக உயர்வடைந்து உள்ளது.
252 பேர் சாவு
தமிழ்நாட்டில் இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் 252 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு 4,45,385 ஆக உயர்ந்து உள்ளது.