தமிழ்நாட்டில் இன்று 1,733 பேருக்கு கொரோனா; 27 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 1,733 people in Tamil Nadu today; Corona for 27 people
24.9.2021
தமிழ்நாட்டில் இன்று 1,733 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 27 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு:-
தமிழ்நாட்டில் இன்று 1,733 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 53 ஆயிரத்து 848 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 17 ஆயிரத்து 196 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 1,631 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 1 ஆயிரத்து 198 ஆக அதிகரித்துள்ளது.
27 பேர் சாவு
கொரோனா தாக்குதலுக்கு இன்று 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 454 ஆக அதிகரித்துள்ளது.
கோவை
கோவையில் இன்று 210 பேருக்கும், சென்னையில் 205 பேருக்கும், செங்கல்பட்டில் 122 பேருக்கும், ஈரோட்டில் 119 பேருக்கும், திருப்பூரில் 98 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் இன்று 21 பேருக்கும், தென்காசியில் 4 பேருக்கும், தூத்துக்குடியில் 13 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.