ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ்;மத்திய அரசு அறிவிப்பு
1 min read
78 day bonus for railway employees; Federal Government Notice
6/10/2021
ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ் வழங்கப்படும் என மத்திய மந்திரி அனுராக் தாகூர் அறிவித்துள்ளார்.
போனஸ்
தீபாவளிப் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு ரெயில்வே ஊழியர்களுக்கு பண்டிகை கால போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
2020-201 ஆம் ஆண்டில் ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. போனஸ் வழங்கப்படுவதன் மூலம் 11.56 ரெயில்வே ஊழியர்கள் பயன்பெறுவர் எனவும் அதிகாரிகள் அல்லாத ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக மத்திய மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.