இந்தியாவில் மேலும் 18,833 பேருக்கு கொரோனா தொற்று
1 min read
Another 18,833 people in India are infected with corona
6.10.2021
இந்தியாவில் கடந்த 203 நாட்களில் இல்லாத வகையில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. நேற்று காலையில் மேலும் 18,833 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக பதிவாகி இருந்தது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கடந்த 203 நாட்களில் இல்லாத வகையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை 8 மணிவரை கடந்த 24 மணி நேரத்தில் 18,833 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 9,735, மராட்டியத்தில் 2,401, தமிழ்நாட்டில் 1,449, மிசோரத்தில் 1,471 பேருக்கு தொற்று உறுதியானது.
தொற்று பதிப்பில் இருந்து 24,770 பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரத்து 687 ஆக அதிகரித்துள்ளது.
பலி
இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 278 பேர் இறந்துள்ளனர்.
இதில் கேரளாவில் 151, மகாராஷ்டிராவில் 39 பேர் உள்பட 278 பேர் இறந்துள்ளனர்.
இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,49,538 ஆக உயர்ந்தது. இதில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 1,39,272 பேர் அடங்குவர்.
கொரோனா தொற்று மீட்பு விகிதம் 97.94 சதவிகிதமாக உள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 1.34 சதவிகிதமகாக உள்ளது.
கடந்த 37 நாட்களாக தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 3 சதவிகிதத்திற்கும் கீழ் உள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய 57.68 மாதிரிகள் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.