பிரபல மாடல் அழகி மருத்துவமனையில் வைத்து கைது
1 min read
Celebrity model Rajakanya Baruha has been admitted to hospital
6.10.2021
பிரபல மாடல் அழகி தனியார் மருத்துவமனையில் வைத்து கைது செய்யப்பட்டார்.
மாடல் அழகி
2016 ஆம் ஆண்டில் மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளரும், மாடல் அழகியுமான ராஜகன்யா பாருஹா இன்று அசாம் மாநில போலீசாரால் கவுகாத்தியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கடந்த வாரம் குடிபோதையில் சொகுசு கார் ஓட்டும் போது சாலையோர தொழிலாளர்கள் மீது மோதியதில் 8 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இதை தொடர்ந்து போலீசார் அவரை செவ்வாய்க்கிழமை போலீஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் உடல் நலம் சரி இல்லை என கூறி தனியார் மருத்துவமனையில் சேர்ந்ததால் ஆஜராகவில்லை.
கைது
இதை தொடர்ந்து கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள் குழு அவரை பரிசோதித்து அவருக்கு உடல்நலக் கோளாறுகள் எதுவுமில்லை என்று கூறியதை அடுத்து நேற்று பிற்பகல் போலீசார் அவரை கைது செய்தனர்.