தமிழகத்தில் இன்று 1,432 பேருக்கு கொரோனா: 25 பேர் பலி
1 min read
Corona for 1,432 people in Tamil Nadu today: 25 killed
6.10.2021
தமிழகத்தில் இன்று மேலும் 1,432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 1,432 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,519 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது வரை 16,637 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் இதுவரை 26,72,843 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 26,20,499 பேர் குணமடைந்துள்ளனர். 35,707 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் 176 பேருக்கும், கோவையி் 149 பேருக்கும், செங்கல்பட்டில் 110 பேருக்கும், ஈரோட்டில் 90 பேருக்கும், தஞ்சையில் 80 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இன்று 1,45,338 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 1,44,832 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 4,78,90,758 மாதிரிகளும் 4,69,78,922 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
நெல்லையில் 23 பேருக்கும், தென்காசியில் 3 பேருக்கும், தூத்துக்குடியில் 14 பேருக்கும் இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.