லக்னோ விமான நிலையத்தில் ராகுல்காந்தி தர்ணா
1 min read
Rahul Gandhi Tarna at Lucknow Airport
6.10.202
லக்னோ விமான நிலையத்தில் ராகுல்காந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதன்பிறகு அவரை லகிம்பூருக்கு செல்ல அனுமதி அளித்தனர்.
வன்முறையில் 9 பேர் பலி
உத்திரபிரதேசம் லகிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் மத்திய மந்திரி மகனின் கார் மோதி விவசாயிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் பலியானார்கள்.
லகிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி பன்வீர்பூர் கிராமத்திற்கு சென்றார். அப்போது போலீசார், பிரியங்கா காந்தியை அந்த கிராமத்திற்குள் அனுமதிக்காமல் கிராம எல்லையிலேயே போலீசார் கைது செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று லகிம்பூர் செல்ல இருந்த நிலையில், உத்திரபிரதேச அரசு அனுமதி மறுத்தது.
பின்னர், லகிம்பூர் செல்ல ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு உத்தரப்பிரதேச அரசு அனுமதி வழங்கப்பட்டு அவர்களுடன் மேலும் 3 பேர் மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
தர்ணா
இதன்காரணமாக டெல்லி விமான நிலையத்திலிருந்து உத்தரபிரதேச மாநிலம் லக்னோ விமான நிலையத்திற்கு வந்த ராகுல்காந்தி, பஞ்சாப் முதல்-மந்திரி சட்டீஸ்கர் முதல்-மந்திரி ஆகியோர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
பின்னர் லக்னோ விமான நிலையத்தில் நிருபர்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது:-
எங்கள் காரில்….
உத்தரபிரதேச அரசால் எனக்கு என்ன அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், போலீசார் என்னை விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல விடவில்லை.
நாங்கள் எங்கள் காரில் (லகிம்பூர் கேரிக்கு) செல்ல விரும்புகிறோம். ஆனால் போலீசார் எங்களை அவர்கள் வாகனத்தில் அழைத்துச் செல்ல விரும்புகிறார்கள். எனது வாகனத்தில் செல்ல அனுமதிக்குமாறு அவர்களிடம் கேட்டேன். அவர்கள் ஏதோ திட்டமிடுகிறார்கள். நான் எப்படி செல்ல வேண்டும் எனக்கூற சட்டம் ஏதும் உள்ளதா? இங்கு என்ன நடக்கிறது என்பதை சரியாக காட்டுங்கள்.
இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்
அனுமதி
நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு அதிகாரிகள் லகிக்பூர் செல்ல அனுமதி வழங்கினர். அதனை தொடர்ந்து ராகுல் காந்தி தலைமையிலான 5 பேர் கொண்ட காங்கிரஸ் குழு வன்முறையால் பாதிக்கப்பட்ட லகிம்பூர் கேரிக்கு லக்னோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர்.