2 பத்திரிகையாளர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு
1 min read
2 Nobel Peace Prize for Journalists
8.10.2021
இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு, 2 பத்திரிகையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
நோபல் பரிசு
நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசுகள் குறித்த அறிவிப்புகள் 4ம் தேதி முதல் துறை ரீதியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியல், இலயக்கியல் துறைக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
பத்திரிகையாளர்கள்
இந்த நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு பிலிப்பைன்சை சேர்ந்த மரியா ரெஸ்சா, ரஷ்யாவை சேர்ந்த டிமிட்ரி முராடோவ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. பத்திரிகையாளர்களான இவர்கள் பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை பாதுகாக்க மேற்கொண்ட முயற்சிகளுக்காக விருது வழங்கப்படுவதாக பரிசுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.