இந்தியாவில் மேலும் 21,257 பேருக்கு கொரோனா; 271 பேர் சாவு
1 min read
Corona for a further 21,257 in India; 271 deaths
8/10/2021
இந்தியாவில் மேலும் 21,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 205 நாட்களில் குறைவான பதிவாகும்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது. இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 21,257 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த 205 நாட்களில் குறைந்த பதிவாகும். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,39,15,569 பேராக உள்ளது.
271 பேர் சாவு
நாட்டில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 271 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,50,127 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது இந்தியாவில் 2,40,221 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த தகவலை இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலக அளவில்
உலக அளவில் இன்று காலை 09:50 மணி நிலவரப்படி உலகில் கோவிட் தொற்றால் 23 கோடியே, 75 லட்சத்து, 50 ஆயிரத்து, 924 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 48 லட்சத்து, 49 ஆயிரத்து, 411 பேர் பலியாகினர். 21 கோடியே, 46 லட்சத்து, 48 ஆயிரத்து, 398 பேர் மீண்டனர்.