மும்பை துறைமுகத்தில் ரூ.125 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
1 min read
Drugs worth Rs 125 crore seized at Mumbai port
8.10.2021
மும்பையில் உள்ள துறைமுகத்தில் 25 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன் மதிப்பு 125 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது.
போதைப் பொருள்
மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் கடந்த வாரம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கப்பலில் போதை விருந்து நடைபெற்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போதை விருந்தில் பங்கேற்ற ஷாருக்கான் மகன் ஆரியன் கான் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மராட்டியத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் அம்மாநில அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மும்பை துறைமுகத்தில்…
இந்நிலையில், மும்பையில் உள்ள துறைமுகத்தில் 25 கிலோ போதைப்பொருளை வருவாய்த்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
மும்பையின் நஹவஷேவா துறைமுகத்தில் கடந்த புதன்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டெய்னரில் இருந்த 25 கிலோ ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 125 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.