மண்டல விளக்கு பூஜைக்காக சபரிமலையில் நவம்பர் 16-ந் தேதி நடை திறப்பு
1 min read
Opening of the walk on November 16 at Sabarimala for Mandala and Capricorn Lantern Puja
8.10.2021
மண்டல விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நவம்பர் 16-ந் தேதி திறக்கப்படுகிறது.
இது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மண்டல விளக்கு
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந் தேதி திறக்கப்படுகிறது. 17-ந் தேதி முதல் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பின்னர் வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். அப்படி கொண்டு வராத பட்சத்தில் அந்த பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். அய்யப்ப பக்தர்களுக்கான மருத்துவ சான்று மற்றும் ஆன்லைன் சான்றிதழ் ஆய்வு நிலக்கல்லில் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.