மத்திய மந்திரி மிஸ்ராவின் மகன் நேபாளத்துக்குத் தப்பி ஓட்டம்?
1 min read
Union Minister Misra’s son flees to Nepal?
8/10/2021
லக்கிம்பூர் கலவர சம்பவத்தில் தொடர்புடைய மத்திய மந்திரி மிஸ்ராவின் மகன் நேபாளத்துக்குத் தப்பி ஓடிவிட்டதாக பரபரப்பாக பேசப்படுகிறது.
உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் கெரியில் நடந்த கலவரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட மத்திய மந்திரி மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா இன்று காலை 11 மணிக்கு நேரில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி போலீசார் சம்மன் அனுப்பினார்கள். போலீஸ் டிஐஜி உபேந்திரா அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு முன் இதுவரை ஆஷிஸ் மிஸ்ரா ஆஜராகவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாளம்
இதற்கிடைடேய ஆஷிஸ் மிஸ்ரா நேபாளத்துக்குத் தப்பிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விவசாயிகள் அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா வெளியிட்டஅறிக்கையில், “ மந்திரியின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எங்கு இருக்கிறார் எனத் தெரியவில்லை. அவர் தொடர்ந்து தனது இருப்பிடங்களை மாற்றி வருகிறார். அவரைப் பிடிக்க பல போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மிஸ்ரா இன்னும் கைது செய்யப்படாதது அதிர்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே நேபாளத்துக்கு மிஸ்ரா தப்பித்துச் சென்றுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதால், அதுகுறித்து உ.பி. போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று அளித்த பேட்டியில், “மத்திய மந்திரியின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா நேபாளத்துக்குத் தப்பிவிட்டதாகத் தகவல்கள் வருகின்றன. அதுகுறித்து போலீஸார் விசாரித்து அவரைக் கண்டுபிடித்து அழைத்துவர வேண்டும். இதுவரை கலவரம் தொடர்பாக இருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். மிஸ்ரா விசாரணைக்கு ஆஜராகக் கோரி அவரின் வீட்டு முன் போலீஸார் நோட்டீஸே ஒட்டியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.