இந்தியாவில் தினசரி 18,132 பேருக்கு கொரோனா; 193 பேர் சாவு
1 min read
Corona to 18,132 people daily in India; 193 deaths
11.10.2021
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. ஒரே நாள் பாதிப்பு 18,132 பேராக குறைந்தது. 193 பேர் இறந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் சமீப நாட்களாக கொரோனா 2வது அலையின் பாதிப்புகள் வெகுவாக குறைந்து வருகின்றன. இந்த நிலையில், இந்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள செய்தியில், நாடு முழுவதும் ஒரே நாளில் 18,132 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.
இது கடந்த ஞாயிற்றுக்கிழமை 18,166, சனிக்கிழமை 19,740, கடந்த வெள்ளிக்கிழமை 21,257 மற்றும் வியாழக்கிழமை 22,431 ஆக இருந்தது. இதனால், தொற்று வித்தியாசம் கடந்த சில நாட்களில் ஆயிரத்திற்கும் கூடுதலாக தொடர்ந்து குறைந்து வருகிறது.
கடந்த 3 நாட்களாக 20 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
193 பேர் சாவு
நாடு முழுவதும் இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் 193 பேர் (நேற்று 214 பேர்) உயிரிழந்து உள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 50 ஆயிரத்து 782 ஆக உள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.33 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
21,563 பேர் குணமடைந்து சென்ற நிலையில், மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சத்து 93 ஆயிரத்து 478 ஆக உயர்ந்து உள்ளது. இதனால், குணமடைந்தோர் விகிதம் 97.99 சதவீதம் ஆக உள்ளது. நாடு முழுவதும் 2,27,347 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.