3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு
1 min read
Nobel Prize in Economic Sciences for 3 people
11.10.2021
நடப்பு 2021ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
நோபல் பரிசு
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
அந்த வகையில் 2021ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் அக்.,04 முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்பட்டன.
மற்ற துறைகளுக்கான நோபல் பரிசுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் இறுதியாக இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கார்டு, ஜோஸ்வா ஆங்கிரிஸ்ட், கியூடோ இம்பென்ஸ் ஆகிய மூன்று பேருக்கும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் பொருளாதாரம் குறித்த பங்களிப்பிற்காக இவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
அமைதிக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிரிந்து அளிக்கப்பட்டுள்ளது.