தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை உடனடியாக வழங்க கோரிக்கை
1 min read
Request for immediate supply of water to Tamil Nadu
11.10.2021
டெல்லியில் நடந்த காவிரி ஒழுங்காற்றுக்குழு கூடடத்தில் தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய தண்ணீரை உடனடியாக திறந்துவிட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது.
53-வது கூட்டம்
டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 53 வது கூட்டம் இன்று மாலை நடந்தது. குழுவின் தலைவர் நவீன் குமார் தலைமை தாங்கினார்.
இதில சிறப்பு அழைபாளர்களாக தமிழ்நாடு பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, குழு உறுப்பினர்களான தமிழ்நாடு சார்பில் காவிரி தொழில் நுட்பக்குழு தலைவர் ஆர். சுப்பிரமணியம், நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் எஸ்.ராமமூர்த்தி மற்றும் 4 அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில அரசுகள் சார்பில் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
வற்புறுத்தல்
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய 28.6 டி.எம்.சி. காவிரித் தண்ணீரை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு சார்பில் வழங்கப்பட்டது.