காஷ்மீரில் வளர்ச்சி பணிகள் குறித்து மத்திய மந்திரி முருகன் ஆய்வு
1 min read
Union Minister Murugan on development work in Kashmir
11.10.2021
மத்திய இணை மந்திரி முருகன் ஜம்மு – காஷ்மீரில் மத்திய அரசின் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்ததுடன் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார்.
மந்திரி முருகன்
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை இணை மந்திரியும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான முருகன் 3 நாள் பயணமாக கடந்த 9ம் தேதி அன்று ஜம்மு – காஷ்மீர் சென்றார்.
தெற்கு காஷ்மீர் ஸ்ரீநகர் மற்றும் சோபியான் மாவட்டத்தை சேர்ந்த பா.ஜ.க. தொண்டர்களை சந்தித்து அம்மாவட்ட மக்களின் சமூக பொருளாதார நிலை குறித்து விவாதித்தார்.
வளர்ச்சி திட்டங்கள்
சோபியான் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு சென்று அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும் முறைகள் குறித்து ஆய்வு செய்தார். ‘அரசு வளர்ச்சி திட்டப் பணிகள் தடையின்றி மக்களை சென்றடைய வேண்டும்’ என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சோபியான் மாவட்டத்தின் ஷிர்மால் என்ற இடத்தில் கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியை திறந்து வைத்தார்.
சவூரா மற்றும் மன்லுா ஆகிய இடங்களில் செம்மறி ஆடு வளர்ப்பு பண்ணைகளை நேற்று தொடங்கி வைத்தார். அனந்த்நாக் மாவட்டத்தில் கோகேர்நாக் என்ற இடத்தில் உள்ள மீன் பண்ணையை பார்வையிட்டார். அதன் பின் சோபியான் மாவட்டத்தில் உள்ள ஆசியாவின் மிகப் பெரிய ஆப்பிள் தோட்டத்தை பார்வையிட்டார். அங்குள்ள விவசாயிகளுடன் உரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.