விபத்தில் இந்த போலீசார் குடும்பத்துக்கு 5,577 போலீசார் இணைய தளம் மூலம் இணைந்து உதவி
1 min read
5,577 police in the crash were assisted by the police through the police website
17.10.2021
விபத்தில் இந்த போலீசார் குடும்பத்துக்கு 5,577 போலீசார் இணைய தளம் மூலம் இணைந்து உதவி வழங்கினார்கள்.
விபத்தில் பலி
நாகையில் விபத்தில் இறந்த காவலர் குடும்ப எதிர்காலத்திற்காக, மாநிலம் முழுவதும் பணியாற்றும் 5 ஆயிரத்து 577 போலீசார் இணைந்து ரூ.27 லட்சத்து 88 ஆயிரத்து 500 நிதி வழங்கினர்.
நாகை மாவட்டம் புஷ்பவனத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயல்37). தலைஞாயிறு போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த ஜூலை 30-ம் தேதி ஒரு வழக்கு விசாரணைக்காக நாகை சென்று திரும்பும்போது விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
எதிர்பாராத விபத்தால் பிரபாகரனை சார்ந்திருந்த வயதான தந்தை, மனைவி, குழந்தைகள் நிலை குலைந்தனர்.
உதவி
இவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, பிரபாகரனுடன் கடந்த 2003-ம் ஆண்டு பணியில் சேர்ந்த 5 ஆயிரத்து 577 போலீசார் உதவிக்கரம் நீட்ட முடிவு செய்தனர். 2003-ம் ஆண்டு பேட்ஜ் போலீசார் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வரும் நிலையில்,
டெலிகிராப் சமூக வலைத்தளம் மூலம், 5 ஆயிரத்து 577 போலீசாரும் இணைந்தனர். ஒவ்வொருவரும் தலா 500 ரூபாய் வீதம் வழங்கினர்.
போலீசார் வழங்கிய ரூ.27 லட்சத்து 88 ஆயிரத்து 500 பிரபாகரனின் மூத்த
மகன் அகிலேஷ் (வயது14) பெயரில் ரூ.11 லட்சத்து24 ஆயிரத்து 610 மற்றொரு மகன் அபூர்வன் (3),பெயரில் ரூ.7 லட்சத்து 38 ஆயிரத்து 606 காப்பீடு நிறுவனத்தில் டெபாசிட் செய்தும், பிரபாகரன் மனைவி பவானி (33) பெயரில் ரூ.55 ஆயிரத்து 400, தந்தை ராமஜெயம் பெயரில் ஒரு லட்சம் ரூபாயும் வங்கியில் டெபாசிட் செய்து, அதற்கான சான்றுகளை பிரபாகரின் குடும்பத்தினரிடம் நேற்று போலீசார் வழங்கினர்.
அரசின் உதவியை எதிர்பாராமல் சக போலீஸ் நண்பர்கள் உதவியது குடும்பத்தாருக்கு பெரும் நெகிழ்ச்சியை உண்டாகியுள்ளது.