இந்தியாவில் மேலும் 14,146 பேருக்கு கொரோனா; 144 பேர் சாவு
1 min read
Corona for a further 14,146 in India; 144 deaths
17/10/2021
இந்தியாவில் மேலும் 14,146 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 144 பேர் இறந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 14,146 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 19,788 பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 144 பேர் தொற்று பாதிப்புக்கு பலியாகியுள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்து 67 ஆயிரத்து 719 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 95 ஆயிரத்து 846 ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 34 லட்சத்து 19 ஆயிரத்து 749- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 52 ஆயிரத்து 124- ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் நேற்று ஒருநாளில் மட்டும் 41 லட்சத்து 20 ஆயிரத்து 772 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 97 கோடியே 65 லட்சத்து 89 ஆயிரத்து 540 ஆக உள்ளது.