கேரளாவில் கனமழை, நிலச்சரிவில் 21 பேர் பலி
1 min read
Heavy rains, landslides kill 21 in Kerala
17.10.2021
கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 21 பேர் இறந்துள்ளனர்.
கேரளாவில் கனமழை
கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில், இடுக்கி மற்றம் கோட்டயம் மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சபரிமலை கோவிலுக்கு இன்றும் நாளையும் செல்ல வேண்டாம் என பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே கேரளா மாநிலம் கோட்டயம், இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது. கோட்டயத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 12 பேரும், இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேரும் உயிரிழந்தனர். பூவஞ்சி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 23 பேரில் இதுவரை 17 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்து உள்ளது என மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை தெரிவித்து உள்ளது. நிலச்சரிவில் சிக்கி பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.