June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல்; மத்திய ஆய்வுக் குழு தகவல்

1 min read

The corona vaccine did not cause the death of actor Vivek; Central Study Group Information

22/10/2021
நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் காரணமில்லை என மத்திய ஆய்வு குழு தெரிவித்துள்ளது.

விவேக் மரணம்

நடிகர் விவேக் கொரேனா பற்றிய விழிப்புணர்வு பிரசாரம் செய்தார். அதோடு அவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர் தடுப்பூசி பற்றி யாரும் அச்சப்படவேண்டாம் என்று வலைதளத்தில் சொல்லி வந்தார். எல்லோரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் என்றும் பேசினார்.

அவர் தடுப்பூசிய 2 நாளில் மரணம் அடைந்தார். அவர் தடுப்பூசி செலுத்தியதால்தான் மரணம் அடைந்தார் என்று தவறான வதந்தி பரவியது.

ஆனால் நடிகர் விவேக்கின் மரணம் குறித்து தடுப்பூசியால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி ஆய்வு செய்த மத்திய குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இரு நாட்களுக்கு பிறகு 2021 ஏப்ரல் 17-ல் விவேக் இறந்தது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நடிகர் விவேக் மரணத்துக்கு கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் காரணமில்லை என தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 15-ல் கொரோனா தடுப்பூசிபோட்டுக்கொண்ட நடிகர் விவேக் மாரடைப்பால் ஏப்ரல் 17-ல் உயிரிழந்தார். உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே விவேக் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.