June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் வெற்றிபெற்ற யூனியன் தலைவர்கள்

1 min read

Union Charman who won in Tenkasi district

22.10.2021

தென்காசி மாவட்டத்தில் நேற்று பஞ்சாயத்து யூனியன் தலைவர்( சேர்மன்) தேர்வு அந்தந்த யூனியன் அலுவலகத்தில் நடந்தது. யூனியன் கவுன்சிலர்கள் ஒட்டுபோட்டனர்.

தென்காசி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவராக வல்லம் சேக் அப்துல்லா, செங்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக தெற்கு மேடு திருமலை செல்வி, கீழப்பாவூர் ஒன்றிய குழுத் தலைவராக காவிரி சீனித்துரை, கடையம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவராக செல்லம்மாள் முருகன், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக வலசை சுப்பம்மாள், வாசுதேவநல்லூர் ஒன்றிய குழுத் தலைவராக பொன் .முத்தையா பாண்டியன், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக விஜயலட்சுமி (மதிமுக), சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் லாலா சங்கரபாண்டியன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
இவர்களில் விஜயலட்சுமியை தவிர மற்ற அனைவரும் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.