தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு
1 min read
Bonus announcement for Tamil Nadu government employees
23.10.2021
தீபாவளி திருநாளையொட்டி தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் வரை போனஸ் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
தீபாவளி போனஸ்
தமிழகம் முழுவதும் வருகிற 4-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் போனஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
- தீபாவளி திருநாளையொட்டி தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் வரை போனஸ் வழங்கப்படும்.
- சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும்.
- 8.33 சதவீதம் போனஸ், 1.67 சதவீதம் கருணைத் தொகை என 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.