இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்
1 min read
Rahul Dravid appointed head coach of Indian cricket team
3.11.2021
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பயிற்சியாளர்
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருக்கும் ரவிசாஸ்திரியின் பதவிக்காலம் வரும் டி20 உலகக் கோப்பை போட்டியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணி உடனான தொடரில் இருந்து டிராவிட் பயிற்சியாளராக செயல்படுவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. ராகுல் டிராவிட்டின் பங்களிப்பு மூலம் இந்திய அணி பல உயரங்களை அடையும் என நம்புவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.