இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 10,853 பேராக குறைந்தது; 526 பேர் சாவு
1 min read
Daily corona exposure in India drops to 10,853; 526 deaths
7.11.2021
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 10,853 பேராக குறைந்துள்ளது. பலி எண்ணிக்கை 526 ஆக அதிகரித்துள்ளது.
இந்தயாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை தொடர்ந்து வீழ்ச்சிப்பாதையில் செல்கிறது. தினசரி பாதிப்பு தொடர்ந்து சரிவு அடைந்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் இன்று காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் 10,853 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 12,432 பேர் குணம் அடைந்துள்ளனர்.
526 பேர் சாவு
இந்தயாவில் ஒரே நாளில் 526 பேர் தொற்று பாதிப்புக்கு பலியாகியுள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,43,55,536 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 44 ஆயிரத்து 845- ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3,37,49,900 – ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,60,791 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் நேற்று ஒருநாளில் மட்டும் 28,40,174 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை 1,08,21,66,365 பேருக்கு தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.