மராட்டிய மாநிலத்தில் நக்சலைட்டுகள் 26 பேர்
1 min read
There are 26 Naxalites in the Maharasdra state
13/11/2021
மராட்டிய மாநிலம் கட்சிரோலியில் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் நக்சலைட்டுகள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
நக்சலைட்டுகள்
மராட்டிய மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இங்குள்ள போரியா வனப்பகுதியில் பல ஆண்டுகளாகவே நக்சல்களின் நடமாட்டம் இருந்து வருகிறது.
இந்த வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருக்கும் இடம் குறித்து நக்சலைட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்படி, அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நக்சல்களுக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
26 பேர்
இதில், நக்சைலைட்டுகள் 26 பேர் கொல்லப்பட்டனர். போலீசார் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.