எஸ்-400 ஏவுகணைகளை இந்தியாவுக்கு ரஷ்யா அனுப்ப தொடங்கியது
1 min read
Russia begins shipping S-400 missiles to India
14.11.2021
தரைத்தளத்தில் இருந்து விண்ணில் ஏவக் கூடிய எஸ்-400 ஏவுகணைகளை ரஷ்யா இந்தியாவுக்கு விநியோகம் செய்ய தொடவங்கி உள்ளதாக ரஷ்ய படைகளின் ராணுவ தொழில்நுட்ப சேவை மைய இயக்குனர் டிமிட்ரி சுகர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சீனா, துருக்கி உள்ளிட்ட நாடுகளுக்கு ரஷ்யா எஸ்-400 ஏவுகணைகளை சப்ளை செய்துள்ளது. முன்னதாக கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு எஸ்-400 ரக ஏவுகணைகளை அளிக்க ரஷ்யா-இந்தியா ஆகிய இரு நாடுகள் இடையே தொழில் ஒப்பந்தம் இடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதன்படி தற்போது இந்தியாவுக்கு ஏவுகணைகள் விநியோகம் துவங்கியது. ரஷ்யா இந்த அதிநவீன ஏவுகணைகளை மத்திய தரைக்கடல் நாடுகள், ஆசிய பசிபிக் பகுதியில் உள்ள நாடுகள், ஆப்ரிக்க நாடுகள் ஆகியவற்றுக்கு தயாரித்து விற்பனை செய்வது குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய உள்நாட்டு ஆயுத விற்பனை ஏற்றுமதி நிறுவனமான ரோசோன்போரோ ஏற்றுமதி நிறுவனத்தின் தலைவர் அலெக்சாண்டர் மிகோவ் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.