‘முதல்வரின் முகவரி’ துறைக்கு சிறப்பு அலுவலராக ஷில்பா நியமனம்
1 min read
Shilpa appointed Special Officer for ‘Chief’s Address’
14.11.2021
முதல்வர் முகவரி துறையின் சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் முகவரி
முதல்-அமைச்சரின் குறைதீர்ப்பு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, முதல்வரின் முகவரி என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர், முதல்-அமைச்சர் உதவி மையம், குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு ஒருங்கிணைப்பு ஆகிய துறைகள் ஒன்றிணைந்து ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் முதல்வரின் முகவரி என்ற புதிய துறை சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. முதல்வரின் முகவரி துறையில் மனுக்கல் தீர்வுக்காண ஒற்றை இணையதள முகப்பு பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணை
இதுதொடா்பாக தலைமைச் செயலாளா் இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, முதல்-அமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீா்ப்பு மேலாண்மை அமைப்பு , உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறை ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு, ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை உருவாக்கப்படுகிறது.
முதல்-அமைச்சர் முகவரி துறையின் மனுக்களுக்குத் தீா்வு காண முதல்வரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீா்ப்பு மேலாண்மை அமைப்பின் உதவி எண் மாநிலம் முழுவதும் ஒற்றை இணையதள முகப்பாகப் பயன்படுத்தப்படும். இது முதல்வரின் முகவரி துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும். உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறையின் சிறப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா் சதிஷ், முதல்வரின் முகவரி துறையின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்படுகிறார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.