மதுரையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்; செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு
1 min read
College students protest in Madurai; Semester Exam Postponement
15/11/2021
ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வுகளை நடத்த கோரி மதுரையில் அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வுகளை நடத்த கோரி மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
முன்னதாக கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்திவிட்டு ஆஃப் லைனில் தேர்வு நடத்துவதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திரண்டு, ஆன்லைனில் தேர்வு நடத்த கோரி முழக்கமிட்டனர். இதனையடுத்து 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகள் 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.