பாலியல் குற்றங்கள்: தமிழகம் உள்பட 14 மாநிலங்களில் சிபிஐ அதிரடி சோதனை
1 min read
Sexual offenses: CBI raids 14 states, including Tamil Nadu
16.11.2021
குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் தொடர்பாக தமிழ்நாடு உள்பட 14 மாநிலங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
பாலியல் குற்றம்
நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் தொடர்பாக சமூகவலைதளத்தில் கருத்து மற்றும் வீடியோ பதிவிட்டது தொடர்பாக சிபிஐ கடந்த 14-ம் தேதி 23 வழக்குகள் பதிவு செய்தது. தனித்தனியே பதிவு செய்யப்பட்ட இந்த 23 வழக்குகளில் மொத்தம் 83 பேருக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சிபிஐ இன்று அதிரடி சோதனை நடத்தி வருகிறது. மொத்தம் 14 மாநிலங்களில் உள்ள 76 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.
தமிழ்நாடு, ஆந்திரா, உத்தரபிரதேசம், பஞ்சாப், பீகார், ஒடிசா, ராஜஸ்தான், மராட்டியம், குஜராத், அரியானா, சத்தீஸ்கார், மத்திய பிரதேசம், இமாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் சோதனை நடத்தி வருவதாக சிபிஐ செய்தித்தொடர்பாளர் ஆர்.சி. ஜோஷ் தெரிவித்துள்ளார். இந்த சோதனையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.