திருப்பதியில் தேங்காயை எப்படி உடைப்பது என்றெல்லாம் சொல்ல வேண்டுமா?; உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி
1 min read
Want to know how to break a coconut in Tirupati ?; Question by the Chief Justice of the Supreme Court
16/11/2021
‛16/11/2921
‛‛தேங்காயை எப்படி உடைப்பது என்றெல்லாம் சொல்ல வேண்டுமா? என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கேள்வி எழுப்பியுள்ளார்.
வழக்கு
திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானம் மீது ஸ்ரீவாரி தாதா என்கிற மனுதாரர் வழக்கு ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா விசாரித்தார். திருப்பதி தேவஸ்தானத்தை நிர்வகிக்கும் ஏழுமலையான் கோவிலில் தேங்காய் உடைப்பது, ஏழுமலையானுக்கு ஆரத்தி காட்டுவது உள்ளிட்ட மத சம்பிரதாய நடைமுறைகள் சரியாக பின்பற்றப்படுவதில்லை என்று ஸ்ரீவாரி தாதா வழக்கு தொடுத்திருந்தார்.
தலையிட முடியாது
இதுகுறித்து தலைமை நீதிபதி என்.வி.ரமணா கருத்துதெரிவித்து கூறியதாவது:-
கோவிலில் தேங்காயை எப்படி உடைப்பது, ஆரத்தி எவ்வாறு காட்டுவது என்பதெல்லாம் சொல்ல வேண்டுமா? இவற்றில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஒருவேளை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத மற்றும் இன பாகுபாடு காட்டுவது போன்ற செயல்கள் நடைபெற்றால் அதில் நீதிமன்றம் தலையிட முடியும். ஆனால் மத வழக்கங்களிலும் சம்பிரதாயங்களிலும் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது.
நானும் எனது குடும்பத்தினரும் திருப்பதி ஏழுமலையானின் பக்தர்கள் என்பதை இந்த இடத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு என்.வி.ரமணா கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.