3 வேளாண் சட்டங்கள் வாபஸ் ஏன்?; பிரதமர் மோடி விளக்கம்
1 min read
3 Why Agricultural Laws Withdraw ?; Prime Minister Modi’s explanation
19/11/2021
3 வேளாண் சட்டங்கள் வாபஸ் ஏன்? என்பது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.
குருநானக் ஜெயந்தியையொட்டி, பல்வேறு விவகாரங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் நேர்ந்திரே மோடி உரையாற்றினார். அப்போது மத்திய அரசு கொண்டுவந்த சர்ச்சைக்குறிய 3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து 3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டது ஏன்? பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
மன்னிப்பு
வேளாண் சட்ட நலனை ஒரு பிரிவு விவசாயிகளுக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லை. தொடர் முயற்சி செய்தும் வேளாண் சட்ட நலனை விளக்குவதில் வெற்றி பெற முடியவில்லை.
வேளாண் சட்டங்களின் நலனை விளக்க முடியாதது எங்களுடைய தவறு என கருதுகிறேன். வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
குழு
வேளாண் துறைக்கு பல்வேறு புதிய நடவடிக்கைகள் மூலம் ஊக்கமளிக்க குழு அமைக்கப்படும். குழுவில் விவசாயிகள், விஞ்ஞானிகள், வல்லூர்கள் இடம்பெறுவார்கள். விவசாயிகள் நலனுக்காக தொடர்ந்து உழைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.