இந்தியாவில் மேலும் 11,106 பேருக்கு கொரோனா
1 min read
Corona for another 11,106 people in India
19.11.2021
இந்தியாவில் மேலும் 11,106 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் ஒரே நாளில் பேர் இறந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கடந்த 16-ந்தேதி 9 ஆயிரத்துக்கு கீழே கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் ஏறுமுகம் காணத்தொடங்கி இருக்கிறது. இந்தநிலையில் நேற்று 11 ஆயிரத்து 919 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.
இந்த நிலையில், இன்று காலை மேலும் 11,106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
459 பேர் சாவு
ஒரே நாளில் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 459 பேர் பலியாகினர். நேற்று புதிதாக பாதிப்புக்கு ஆளானவர்களை காட்டிலும், குணம் அடைந்தவர்கள் சற்று அதிகரித்துள்ளது. அந்த வகையில் 12 ஆயிரத்து 789 பேர் குணம் அடைந்துள்ளனர்.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி நாடெங்கும் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 620 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது மொத்த பாதிப்பில் 0.37 சதவீதம் மட்டுமே.
மேற்கண்ட புள்ளிவிவரங்களை ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.