June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் இருந்து குலாம் நபி ஆசாத் நீக்கம்

1 min read

Ghulam Nabi Azad fired from Congress disciplinary committee

19.11.2021

காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் இருந்து குலாம் நபி ஆசாத் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ராஜினாமா

காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு நெருக்கமான காங்கிரஸ் நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். இந்த நிலையில் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவை காங்கிரஸ் நேற்று முன்தினம் மாற்றி அமைத்தது.

இந்தக் குழுவில் முன்பு அங்கம் வகித்த குலாம் நபி ஆசாத், சுஷில்குமார் ஷிண்டே ஆகியோர் நீக்கப்பட்டனர். அதேநேரம் தலைவர் பதவியில் ராணுவ முன்னாள் மந்திரி ஏ.கே.அந்தோணி நீட்டிக்கப்பட்டுள்ளார்.

இந்த 5 பேர் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் மூத்த தலைவர் தாரிக் அன்வர் உறுப்பினர் செயலாளராக உள்ளார். முன்னாள் ஒன்றிய மந்திரி அம்பிகா சோனி, கட்சித் தலைவர்கள் ஜெய்பிரகாஷ் அகர்வால், ஜி.பரமேஸ்வர் ஆகியோர் குழுவின் மற்ற உறுப்பினர்கள் ஆவர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.