வேளாண் சட்டம் வாபஸ் விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி; ராகுல் காந்தி வாழ்த்து
1 min read
The success of the farmers in withdrawing the agricultural law; Congratulations to Rahul Gandhi
19/11/2021
வேளாண் சட்டங்கள் வாபஸ் குறி்த்து ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அவர் சத்தியாகிரக போராட்டத்தால் அநீதிக்கு எதிராக வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.
வேளாண் சட்டங்கள்
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். அப்போது அவர் ஒன்றிய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
ராகுல்காந்தி வாழ்த்து
இந்த நிலையில் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், “விவசாயிகள் சத்தியாகிரகம் ஆணவக்காரர்களை தலைகுனியச் செய்துள்ளது. அநீதிக்கு எதிரான இந்தப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றிக்காக விவசாயிகளுக்கு வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன் ” என இந்தியில் பதிவிட்டுள்ளார்.