தமிழ்நாட்டில் நாளை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
1 min read
Chance of heavy rain in 5 districts of Tamil Nadu tomorrow
22.11.2021
தமிழ்நாட்டில் நாளை 5 மாவட்டங்கிளல் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் நாளை( செவ்வாய்க்கிழமை ) மதுரை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடியில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நவம்பர் 25, 26 ஆகிய நாட்களில் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தென்பரநாடு, மூங்கில்துறைபட்டு பகுதிகளில் தலா 4 செ.மீ. மழையும் மேற்கு தாம்பரம், ஆவடி, எடப்பாடி உள்ளிட்ட பகுதியில் தலா 3 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.