இந்தியாவில் மேலும் 8,488 பேருக்கு கொரோனா; 249 பேர் பலி
1 min read
Corona for another 8,488 in India; 249 killed
22/11/2021
இந்தியாவில் புதிதாக 8,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது கடந்த 538 நாளில் பதிவான மிகக்குறைவான பாதிப்பாகும். ஒரே நாளில் 249 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா நிலவரம் தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
இந்தியாவில் ஒரே நாளில் 8,488 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் நாடுமுழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,45,18,901 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 12,510 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை குணம் அடைதவர்களின் மொத்த எண்ணிக்கை 3,39,34,547 ஆக உயர்ந்துள்ளது.
249 பேர் பலி
ஒரே நாளில் 249 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,65,911 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 1,18,443 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.
இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 98.31 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.35 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 0.34 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தடுப்பூசி
இந்தியாவில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 116.87 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 32,99,337 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.