ரெயிலில் 3¾ கோடி மூத்த குடிமக்கள் கட்டண சலுகையின்றி பயணம் செய்துள்ளனர்
1 min read
More than 30 crore senior citizens have traveled by train free of charge
22.11.2021
கட்டண சலுகையின்றி ரெயிலில் பயணம் செய்த 3¾ கட்டண சலுகையின்றி ரெயிலில் 3¾ கோடி மூத்த குடிமக்கள் பயணம் செய்துள்ளனர் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கட்டண சலுகை
ரெயில்களில் 58 வயதான பெண்களுக்கும், 60 வயதான ஆண்களுக்கும் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகைகள் அளிக்கப்பட்டு வந்தன. ஆனால், கடந்த ஆண்டு மார்ச் 22-ந் தேதியில் இருந்து இந்த கட்டண சலுகை நிறுத்தி வைக்கப்பட்டது. அதனால், மூத்த குடிமக்களும் முழு கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டி உள்ளது.
இதுதொடர்பாக மத்தியபிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்ட கேள்விக்கு ரெயில்வே நிர்வாகம் பதில் அளித்துள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
3.78 கோடி பேர்
கடந்த ஆண்டு மார்ச் 22-ந் தேதியில் இருந்து இந்த ஆண்டு செப்டம்பர் மாதம்வரை 3 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரத்து 668 மூத்த குடிமக்கள் ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். அவர்கள் முழு கட்டணம் செலுத்தி பயணம் செய்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.