July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தனுக்கு ‘வீர் சக்ரா விருது’

1 min read

‘Veer Chakra Award’ for Abhinandan who shot down a Pakistani warplane

22.11.2021

பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

வீர் சக்கரா

பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் குடிமக்களுக்கு நாட்டின் உயரிய விருதுகளான பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ போன்ற விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகின்றன. இந்த விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்படவில்லை.

எனவே கடந்த ஆண்டு (2020) மற்றும் இந்த ஆண்டுக்கான விருதுகள் ஜனாதிபதி மாளிகையில் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 27,-ம் தேதி பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார்.

காஷ்மீரில் முக்கிய தீவிரவாதியைக் கொன்றபோது தன்னுயிரை ஈந்த சுபேதார் சோம்பிர்க்கு மரணத்திற்குப் பின் சௌரிய சக்ரா விருது அவரது மனைவியிடம் இன்று வழங்கப்பட்டது.

ராணுவத்தில் பல்வேறு சாதனைகளை புரிந்தவர்களுக்கான விருதுகள் இன்று வழங்கப்பட்டன. குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பாகிஸ்தானுக்கு எதிரான துல்லிய தாக்குதலின்போது தீரத்துடன் போராடிய தமிழகத்தைச் சேர்ந்த கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கினார்.

இதுமட்டுமின்றி ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை முறியடித்ததற்காக, இந்திய விமானப்படையின் மூத்த அதிகாரி பிரகாஷ் ஜாதவுக்கு, இரண்டாவது மிக உயர்ந்த வீர விருதான கீர்த்தி சக்ரா (மரணத்திற்குப் பின்) வழங்கப்பட்டது.

ஐந்து தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றபோது தன்னுயிரை ஈந்த மேஜர் விபூதி சங்கர் தௌண்டியாலுக்கு சௌர்ய சக்ரா (மரணத்திற்குப் பின்) விருது வழங்கப்பட்டது. அவரது மனைவி இந்த விருதை பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் மேஜர் விபூதி சங்கருக்கு ஐந்து பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்று மற்றும் 200 கிலோ வெடிபொருட்கள் மீட்கும் ஒரு நடவடிக்கையில் ஈடுபட்ட அவரது வீர தீர செயலுக்காக சௌரிய சக்ரா (மரணத்திற்குப் பின்) விருதை பெறுகிறார். அவரது சார்பில் அவரது குடும்பத்தார் பெற்றுக்கொள்கின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.