மனநலம் பாதிக்கப்பட்டவரின் வெறித் தாக்குதலில் 2 மகள்கள் உள்பட 5 பேர் பலி
1 min read
Five people, including 2 daughters, have been killed in a maniac attack by a mentally ill man
27.11.2021
திரிபுராவில் மனநலம் பாதிக்கப்பட்டவரின் வெறித் தாக்குதலில் அவரது 2 மகள்கள் உள்பட 5 பேர் பலினார்கள்.
தாக்குதல்
திரிபுரா மாநிலம் கோவாய் மாவட்டத்தில் பிரதீப் டெப்ராய் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
நேற்று காலை பிரதீப் டெப்ராய் யாரும் எதிர்பாராத வண்ணம் திடீரென ஒரு இரும்புக்கம்பியை எடுத்து தனது மனைவியையும் இரு மகள்களையும் கொடூரமாக அடித்துள்ளார். இதில் இரு மகள்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர் தனது இளைய சகோதரரையும் இரும்புக்கம்பியால் அடித்து கொன்றுள்ளார். படுகாயமடைந்த அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து அவர், சாலையில் சென்ற ரிக்ஷாவை நிறுத்தி, ரிக்ஷா ஓட்டுநரை சரமாரியாக தாக்கியதில் அவரும் உயிரிழந்தார். மேலும் ரிக்ஷா ஓட்டுநரின் மகனையும் தாக்கியதில், அவர் படுகாயமடைந்தார்.
போலீஸ்காரர் பலி
இதுகுறித்து தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் சத்யஜித் முல்லிக் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரதீப் டெப்ராயை கைது செய்ய முற்பட்டபோது, போலீசாரையும் அவர் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த இன்ஸ்பெக்டர் சத்யஜித் முல்லிக், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இவ்வாறு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரஜிப் சென்குப்தா தெரிவித்துள்ளார்.
தற்போது அவர் கைதுசெய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதீப் டெப்ராய்க்கு மன நலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.