June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

சொத்து தகராறில் மருமகளை மாமனார் வெட்டிக் கொலை

1 min read

Father-in-law stabs daughter-in-law to death in property dispute

1.12.2021
சொத்து தகராறில் மருமகளை வெட்டிக் கொலை செய்த மாமனார் போலீசில் சரணடைந்தார்.

சொத்து தகராறு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த ஜங்களாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் சிவா ( வயது 40) ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி முருகம்மாள் (வயது 36) . இவர்களுக்கு மதுநிஷா (வயது11) ரோகித் (வயது 7) இரு குழந்தைகள் உள்ளனர்.
முருகம்மாள் குரும்பேரி பஞ்சாயத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

கணவன் மற்றும் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. கணவனை பிரிந்த முருகம்மாள் கடந்த மூன்று வருடமாக அவருடைய அப்பா வீட்டில் தங்கியுள்ளார்.

வெட்டிக் கொலை

இந்த நிலையில் முருகம்மாள் கடந்த 29 ம் தேதி தனது 2 பிள்ளைகளுடன் தனது கணவர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது முருகம்மாளின் மாமனாரான மணியுடன் இந்த வீடு எனக்கு சொந்தம் நீங்கள் வீட்டை விட்டு வெளியேறுங்கள் என்று முருகம்மாள் கூறியதாக தெரிகிறது. இதன் காரணமாக மாமனார் மற்றும் மருமகள் இடையே வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் ஆத்திரமடைந்த மாமனார் மணி நேற்று காலை 7.30 மணியளவில் முருகம்மாள் சமையலறையில் சமையல் செய்து கொண்டு இருக்கும் பொழுது தான் மறைத்து வைத்திருந்த வெட்டு கத்தியால் முருகம்மாளை கழுத்தில் பின்புறம் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் நிலைகுலைந்த முருகம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

முருகம்மாளின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அதற்குள் மணி தான் வைத்திருந்த சைக்கிளில் சென்று நாட்டறம்பள்ளி போலீசாரிடம் தன் மருமகளை தான் வெட்டி விட்டதாக கூறி சரணடைந்துள்ளார்.

கைது

இது குறித்து தகவலறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து மாமனார் மணியை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.