பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நடத்தையை கண்டித்து பாரதீய ஜனதா எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
1 min read
Bharatiya Janata Party (BJP) MPs protest against the conduct of opposition parties in Parliament
3/12/3031
பாராளுமன்றத்தின் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், எதிர்க்கட்சிகளின் மோசமான நடத்தையை கண்டித்து பார்லிமென்ட் வளாகத்தில் பாரதீய ஜனதா எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
12 எம்.பி.க்கள் சஸ்பெண்டு
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. அப்போது, கடந்த கூட்டத்தொடரில் மோசமாக நடந்து கொண்டதற்காக பல கட்சிகளை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.க்கள் 12 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இதனை திரும்ப பெற வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய போதும், அது ஏற்கப்படவில்லை.
இதனால், பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் எதிர்க்கட்சிகள், உள்ளேயும் தொடர்ச்சியாக அமளியில் ஈடுபடுவதால், இரு அவைகளும் தொடர்ச்சியாக ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன.
பாஜக ஆர்ப்பாட்டம்
இந்நிலையில், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் மோசமான நடத்தையை கண்டித்து பாராளுமன்ற வளாகத்தில் பாரதீய ஜனதா எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கும் புகைப்படங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தி கோஷம் போட்டனர்.