July 9, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்திய கடலோர காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

1 min read

Selection of personnel for the Indian Coast Guard

3/12/2021

இந்திய கடலோர காவல் படையில் 50 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

50 இடங்கள் காலி

இந்திய கடலோர காவல் படையில் 50 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆயுத படைகளில் ஒன்றான இந்திய கடலோர காவல் படையில் 50 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதுபற்றிய விளம்பரம் www.joinindiancoastguard.cdac.in என்ற வலைதளத்தில் வெளிவந்துள்ளது.

இந்திய கடலோர காவல் படை ஆள்சேர்ப்பு 2021

காலி பணியிடங்கள்

பொது பணி (ஆண்) 30 இடங்கள்

கமர்சியல் பைலட் என்ட்ரி (சி.பி.எல்.-எஸ்.எஸ்.ஏ.) (ஆண்/பெண்) 10 இடங்கள்

டெக்னிக்கல் (என்ஜினீயரிங்) (ஆண்) 6 இடங்கள்

டெக்னிக்கல் (எலெக்ட்ரிக்கல்) (ஆண்) 4 இடங்கள்

கல்வி தகுதி

பொது பணிக்கு பட்டப்படிப்பில் தேர்ச்சியுடன், 60% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். கமர்சியல் பைலட் என்ட்ரி பதவிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 60% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். இதுதவிர, டி.ஜி.சி.ஏ. சான்றிதழ் அளித்த பைலட்டுக்கான உரிமம் வைத்திருக்க வேண்டும். டெக்னிக்கல் பதவிகளுக்கு, தொடர்புடைய துறையில் டிப்ளமோ என்ஜினீயரிங் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

பொது பணி 1997ம் ஆண்டு ஜூலை 1ந்தேதி முதல் 2001ம் ஆண்டு 30 ஜூன் வரை (இரு தேதிகளும் உள்பட)

கமர்சியல் பைலட் என்ட்ரி (சி.பி.எல்.-எஸ்.எஸ்.ஏ.) 1997ம் ஆண்டு ஜூலை 1ந்தேதி முதல் 2003ம் ஆண்டு 30 ஜூன் வரை (இரு தேதிகளும் உள்பட)

டெக்னிக்கல் (என்ஜினீயரிங்) 1997ம் ஆண்டு ஜூலை 1ந்தேதி முதல் 2001ம் ஆண்டு 30 ஜூன் வரை (இரு தேதிகளும் உள்பட)

டெக்னிக்கல் (எலெக்ட்ரிக்கல்) 1997ம் ஆண்டு ஜூலை 1ந்தேதி முதல் 2001ம் ஆண்டு 30 ஜூன் வரை (இரு தேதிகளும் உள்பட)

விண்ணப்ப கட்டணம்

கடலோர காவல் படைக்கான பதவிகளுக்கு எந்தவொரு பிரிவினரும் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டாம். அனைத்து பிரிவினருக்கும் விண்ணப்பங்கள் இலவசம்.

விண்ணப்பிப்பது எப்படி

விருப்பமுள்ள தேர்வு எழுதுவோர் ஆன்லைன் விண்ணப்பம் பெற www.joinindiancoastguard.gov.in என்ற வலைதளத்திற்கு சென்று வாய்ப்புகள் (“opportunities”) என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

விண்ணப்பிப்போர் ‘Recruitment of Assistant Commandant02/2022 Batch’ என்ற விளம்பரத்தினை தேர்வு செய்யவும்.

அதன்பின்பு மேற்கூறிய பதவிகளில் ஒன்றை விண்ணப்பிப்போர் தேர்வு செய்ய வேண்டும்.

முக்கிய தேதிகள்

இந்த பதவிகளுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் வழி மட்டுமே ஏற்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தேதி டிசம்பர் 6ந்தேதி நண்பகல் 12 மணிக்கு தொடங்கி டிசம்பர் 17ந்தேதி மாலை 5.30 மணியளவில் நிறைவடையும். நுழைவு அட்டை www.joinindiancoastguard.gov.in என்ற வலைதளத்தில் டிசம்பர் 28ந்தேதி முதல் கிடைக்கும். அதனை பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.