July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி உள்பட 14 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி

1 min read

14 killed in helicopter crash

8.12.0221

இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி உள்பட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார்கள்.

ஹெலிகாப்டர் விபத்து

நீலகிரி மாவட்டம், குன்னுார், வெலிங்கடனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி உள்ளது. இங்கு இன்று நடக்க இருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர், கோவை மாவட்டம், சூலுாரிலுள்ள ராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து, 11.30 மணியளவில் ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி கிளம்பினர்.

விமானத்தில் பயணித்தவர்கள் விவரம் வருமாறு:-

  1. முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்
  2. மதுலிகா ராவத் (பிபின் ராவத் மனைவி)
  3. பிரிகேடியர் லிடர்
  4. லெப்டினன் கர்னர் ஹர்ஜிந்தர் சிங்
  5. குர்சேவர் சிங்
  6. ஜிஜேந்தர் குமார்
  7. விவேக் குமார்
  8. சார் தேஜா
  9. கவில்தார் சத்பால் உள்பட 14 பேர் அதில் சென்றுள்ளனர்.

ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பாதையிலுள்ள காட்டேரி பள்ளத்தாக்குக்கு மேலே பறந்த போது கடும் மேகமூட்டமான சூழ்நிலை நிலவியது. இதனால், ஏற்பட்ட காலநிலை குழப்பம் காரணமாக, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விழுந்து விபத்துக்குள்ளானது.

13 பேர் மரணம்

இதுவரை 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு குன்னுார் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உயிரிழந்ததாக விமானப்படை அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டு உள்ளது.

முக்கிய தகவல்கள்

இந்தியாவுக்கு தனியாக முப்படைகளின் தலைமை தளபதி என்ற பதவி உருவாக்கப்படும், இது நமது படைகளை சிறப்பாக செயலாற்ற வைக்கும் என பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டவர் பிபின் ராவத் குறித்த முக்கிய தகவல்கள் வருமாறு:-

  • தேசிய பாதுகாப்பு அகாடமி, இந்திய ராணுவ அகாடமியில் மாணவராக பயிற்சி பெற்றவர் பிபின் ராவத்.
  • தந்தை பணியாற்றிய அதே பிரிவில் 1978-ஆம் ஆண்டு பிபின் ராவத் ராணுவத்தில் இணைந்தார்.
  • படைப்பிரிவின் தளபதி, கமாண்டிங் இன் சீப், தெற்கு கட்டளை அதிகாரி, உள்ளிட்ட பல்வேறு உயர் பொறுப்புகளை பிபின் ராவத் வகித்துள்ளார்.
  • கர்னல் ராணுவ செயலாளர், ராணுவ இணைச் செயலாளராகவும் பிபின் ராவத் பணியாற்றியுள்ளார்.
  • ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையிலும் பிபின் ராவத் அங்கம் வகித்துள்ளார்.
  • வடகிழக்கு மாநில எல்லைப்பகுதிகள், இந்திய – சீன எல்லைப்பகுதி என பல்வேறு களங்களில் பணியாற்றிய அனுபவம் பிபின் ராவத்திற்கு உண்டு.
  • ஜெனரல் பிபின் ராவத் இந்திய ராணுவத்தின் 27 வது தலைமை தளபதியாக டிசம்பர் 31, 2016 முதல் பொறுப்பேற்றார்.
  • பிபின் ராவத்தின் பதவிக்காலம் முடிவடையும் அன்று முப்படைகளின் தலைமை தளபதி என்ற புதிய பொறுப்பு உருவாக்கப்பட்டது.
  • முப்படைகளின் தலைமை தளபதி என்ற புதிய பதவி உருவாக்கப்பட்ட பிறகு முதல் நபராக பிபின் ராவத் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
  • பிபின் ராவத்தின் சேவையை பாராட்டி பரம் விசிஷ்ட் சேவா விருது, யுத்தம் யுத்த சேவா விருது, சேனா விருது என பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.