ஹெலிகாப்டர் விபத்தில் சித்தூர் ராணுவ அதிகாரியும் பலி
1 min read
Chittoor army officer killed in helicopter crash
9.12.2021
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் சித்தூர் ராணுவவீரர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி ராணுவ வீரர்
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர், குன்னூர் அருகே மலை மீது மோதியதில், அவரும் அவருடைய மனைவி மற்றும் 13 பேர் மரணமடைந்தனர்.
இவர்களில் ஒருவர், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள குர்பல் கோட்ட மண்டலம் எகுவரகட்டா கிராமத்தைச் சேர்ந்த சாய் தேஜா (வயது 27) என்பவர் ஆவார்.
இவர் 2013-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். தொடர்ந்து ‘லேன்ஸ் நாயக்‘ கிரேடு பணியிலிருந்த அவர் தலைமை தளபதியின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
அவருக்கு மனைவி, ஒரு ஆண், பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு வந்த அவர் மீண்டும் பணிக்கு திரும்பினார்.
கதறி அழுதனர்
இந்த நிலையில் நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். அவர் இறந்த தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்டதும் அவரது மனைவி, உறவினர்கள் கதறி அழுதனர். விவரம் தெரியாத அவரது குழந்தைகள் வழக்கம் போல இருந்தனர்.