இந்தியாவில் மேலும் 9,419 பேருக்கு கொரோனா; 159 பேர் சாவு
1 min read
Corona for another 9,419 in India; 159 deaths
9/12/2021
இந்தியாவில் 9 ஆயிரத்து 419 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒரே நாளில் 159 பேர் இறந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு கடந்த சில நாட்களாக 8 ஆயிரத்துக்கு மேல் பதிவாகி வந்தது. இந்த நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு இன்று மீண்டும் 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
அதன்விவரம் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 419 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 46 லட்சத்து 66 ஆயிரத்து 241 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 8 ஆயிரத்து 251 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்து 97 ஆயிரத்து 388 ஆக அதிகரித்துள்ளது.
159 பேர் சாவு
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 94 ஆயிரத்து 742 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 159 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 74 ஆயிரத்து 111 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் ஒரு நாளில் நேரத்தில் 80,86,910 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தடுப்பூசி செலுத்த்ப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,30,39,32,286 ஆக உயர்ந்துள்ளது.