வருண் சிங்கிற்கு பெங்களூருவில் சிகிச்சை
1 min read
Varun Singh is being treated in Bangalore
9.10.2021
ஹெலிகாப்டர் விபத்தில் பலத்த காயம் அடைந்த குரூப் கமாண்டர் வருண் சிங்குக்கு பெங்களூருவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஹெலிகாப்டர் விபத்து
பிபின் ராவத் உள்ளிட்டோர் சென்ற ஹெலிகாப்டரை இயக்கியவர் குரூப் கமாண்டர் வருண் சிங் ஆவார்.ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயம் அடைந்த வருண் சிங்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
கவலைக்கிடமான நிலையில் இருக்கும் அவரை பெங்களூருவில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உயர் சிகிச்சை அளிக்கலாமா என பரிசீலனை செய்யப்பட்டது. அங்கு தீக்காயங்களுக்கு நவீன முறையில் சிகிச்சை அளிக்க வசதிகள் உள்ளன. எனவே அங்கு அவரை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது.
குரூப் கேப்டன் வருண் சிங் இஸ்ரோவின் “ககன்யான்“ திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர் ஆவர். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு 3 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.