இந்தியாவில் மேலும் 8,503 பேருக்கு கொரோனா; 624 பேர் சாவு
1 min read
Corona for another 8,503 in India; 624 deaths
10.12.2021
இந்தியாவில் மேலும் 8,503 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் 624 பேர் இறந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் அவ்வப்போது கொரோனா தொற்று ஏறுமுகமும், இறங்குமுகமும் கண்டு வருகிறது. ஆனாலும் சின்னதாய் ஒரு ஆறுதல், தினசரி பாதிப்பு 10 ஆயிரத்துக்குள் அடங்கி உள்ளது.
அதன்படி இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 8,503- பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 7,678 பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 624 பேர் தொற்று பாதிப்புக்கு பலியாகியுள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,46,74,744 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 94 ஆயிரத்து 943 ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3,41,05,066 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,74,735 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் நேற்று ஒருநாளில் மட்டும் 74,75,970 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை 1,31,கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.