தமிழ்நாடடில் இன்று 681 பேருக்கு கொரோனா; 13 பேர் சாவு
1 min read
Corona for 681 people in Tamil Nadu today; 13 dead
11.12.2021
தமிழ்நாட்டில் இன்று 681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 13 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மத்திய நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று 681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 34 ஆயிரத்து 715 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 710 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 90 ஆயிரத்து 346 ஆக அதிகரித்துள்ளது.
13 பேர் சாவு
கொரோனா தாக்குதலுக்கு இன்று 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 599ஆக அதிகரித்துள்ளது.
கோவையில் 120 பேருக்கும், ஈரோட்டில் 54 பேருக்கும், செங்கல்பட்டில் 50 பேருக்கும், நெல்லையில் 5 பேருக்கும், தூத்துக்குடியில் 2 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளனர்.
கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.