மலையாள சினிமா இயக்குனர் அலி அக்பர் இந்து மதத்திற்கு மாற முடிவு
1 min read
Malayalam film director Ali Akbar has decided to convert to Hinduism
11.12.2021
மலையாள சினிமா இயக்குனரான அலி அக்பர் இந்து மதத்திற்கு மாற முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். முப்படைகளின் முதன்மை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை கொண்டாடும் வகையில் சிலர் சர்ச்சை கருத்துகளை பதிவு செய்ததாக சொல்லப்படுகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் சார்ந்துள்ள மதத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார் அலி அக்பர்.
அவர் மட்டுமல்லாது அவரது மனைவி லூசியம்மாவும் தன்னுடன் இந்து மதத்திற்கு மாற முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார் அவர்.
“என் பெயரை ராமசிம்ஹன் என மாற்றிக் கொள்ள முடிவு செய்துள்ளேன். எனது மகள்களை எக்காரணம் கொண்டும் மதம் மாறும்படி நான் சொல்ல மாட்டேன். அது அவர்களது விருப்பம்” என தெரிவித்துள்ளார் அவர். இதனை அவரது புதிய சமூக வலைதள பக்கத்தின் ஊடாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக கேரள மாநில பாஜக மாநில கமிட்டி குழுவில் உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார் அவர். அக்கட்சியின் கேரள மாநில தலைவர் தேர்வில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் கட்சியை விட்டு வெளியேறினார்.