மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி
1 min read
Only those who have been vaccinated at the Meenakshi Temple in Madurai are allowed
11.12.2021
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்ற கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி
கொரோனா நோய்தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு இதுவரை லட்சக்கணக்கான மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கொரோனா 3-வது அலையை தடுக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துரை அறிவுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்குள் வருகிற 13-ந் தேதி முதல் 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வருபவர்கள் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.